Computer Service At Your Door Step

System Upgrade, Computer service , UPS, Moniter, Mother board , Hdd , Chip level Service , networking , laser jet and ink jet toner refill , Special care for Laptops , 2nd System Also Available

NeiDhal Computers
Chennai
99761 99632

Thursday, August 28, 2008

காதல், கல்யாணம் என்றால் என்ன?

ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த ஆசிரியர், உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு விதிமுறை உள்ளது.

நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது. ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த மாணவரும் சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்.

முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான்.

ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை. முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன் வகுப்பிற்குத் திரும்பினான்.

அப்போது ஆசிரியர் கூறினார். காதலும் இதுபோலத்தான். ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

க‌‌ல்யாண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?........

அந்த மாணவன் மீண்டும் கேட்டான் கல்யாணம் என்றால் என்ன?

அதற்கு அந்த ஆசிரியர், இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீ அங்குள்ள கம்பு வயலுக்குச் சென்று அதே போல் பெரிய கம்பு ஒன்று எடுத்துவா. பழைய விதிமுறையே இதற்கும் பொருந்தும். முன்னோக்கி மட்டுமேச் செல்ல வேண்டும்.

அந்த மாணவன் கம்பு வயலுக்குச் சென்றான். இம்முறை மாணவன் அதிக கவனத்துடன் நடந்து கொண்டான். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

வயலுக்குச் சென்று அவனுக்கு பெரிது என்று பட்ட ஒரு நடுத்தரமான கம்பை மிகவும் திருப்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காண்பித்தான்.

இந்த முறை நீ வெற்றியுடன் வந்துள்ளாய். நீ பார்த்த ஒன்றே உனக்கு பெரிதாக தெரிந்தது. இதுவே நமக்கு சரி என்று அதனை தேர்வு செய்து கொண்டு திருப்தியோடு வந்திருக்கிறாய். இதுவே கல்யாணம் என்று ஆசிரியர் பதிலளித்தார்.

25 திருமணத்தில் நிறைவடைந்த துணைத் தேடல்

நேபாளத்தைச் சேர்ந்த ராம்சந்திரா கடுவாவின் சிறந்த இணைத் தேடல் தனது 25வது திருமணத்தில் நிறைவடைந்துள்ளது.

49 வயதாகும் ராம்சந்திரா கடுவா, தனது 23ம் வயதில் இருந்து 25 திருமணங்களை செய்து கொண்டுள்ளார். தனது 25வது மனைவியுடன் கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கடுவா, இதன் மூலம் தனது துணைத் தேடல் நிறைவடைந்துவிட்டது. இனி தான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

இத்தனை திருமணங்களுக்கும், இந்த முடிவிற்கும் காரணம் என்ன என்பதை அவரது சொந்த மற்றும் சோகக் கதையின் மூலம் பார்க்கலாம்.

கடுவாவின் 26ஆவது வயதில் முதல் திருமணம் நடந்துள்ளது. திருமணமான கொஞ்சா நாட்களிலேயே கடுவாவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அடுத்தடுத்து தான் திருமணம் செய்து கொண்ட பெண்கள் இவ்வாறே சென்றுவிட தொடர்ந்து 25 திருமணங்களை கடுவா செய்திருக்கிறார்.

ஒரு மனைவி என்னை விட்டுச் சென்றதும் நான் மற்றொரு திருமணம் செய்து கொண்டேன். எனது ஏழ்மை நிலையைக் காரணம் காட்டியே அனைத்து மனைவிகளும் என்னை விட்டுப்பிரிந்து சென்றுவிட்டனர் என்று கூறும் கட்டுவாவிற்கு, 25 மனைவிகளில் தற்போது 8 பேர் மட்டுமே நினைவில் இருக்கின்றனர்.

சுமை தூக்கும் கூலித் தொழிலாளியான கடுவா, குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளார்.

தனது 25வது மனைவி சாரதாவுடன் கடந்த 7 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வரும் கடுவாவின் எண்ணம், தற்போது தனது மூன்று குழந்தைகளின் படிப்பிலும், சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற லட்சியத்திலும் உள்ளது.

இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், ஏதோ 25வது திருமணத்திலாவது அவரது தேடல் நிறைவடைந்ததே என்று நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

Thursday, May 1, 2008

பெற்றோரை கவர்வாரா காதலர்

காதல் என்றாலே உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் தலையை தூக்கிப் பார்த்துவிட்டு போகின்றன. அவ்வளவு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் விஷயம் காதல்தான்.

காதலிக்கத் துவங்கிவிட்டாலே உடலில் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக் கொள்ளும். நாம் காதலிப்பதை உரிய நபரிடம் சொல்லும்வரை கத்திமேல் வாழ்க்கைதான்.

அவரிடம் சொல்லி ஒப்புதல் பெற்றாலும் அந்த பரபரப்பு வேறொரு ரூபத்தில் நம்மை சுற்றிக் கொண்டிருக்கும்.

ஆம், பொது இடங்களில் எங்காவது ஒன்றாகச் செல்லும்போது இருவருக்கும் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால்... ஏன் பெற்றோர் யாராவது பார்த்துவிட்டால் என்ற அந்த அச்சமும் கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான். அது அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இதுபோன்று காதலர்கள் காதலிக்கும் நேரத்தில் பல்வேறு விஷயங்களுக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது.

இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள். இப்போது சொல்லப்போவதுதான் இருப்பதிலேயே பெரிய விஷயம்.

ஆம், நாம் காதலிக்கும் நபரை நமது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அந்த ஒரு சந்திப்பு. அந்த நேரத்தில் நமது மனம், சிந்தனை, உடல், செயல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கு அல்லவா ஓடிக் கொண்டிருக்கும்.

வீட்டிலோ அல்லது கோயில், வெளி நிகழ்ச்சி என எங்கு வேண்டுமானாலும் இந்த சந்திப்பு நிகழலாம்.
நமது பெற்றோரை காதலர் கவர்வாரா, பெற்றோரது மனதிற்கு பிடித்தவராக காதலர் இருப்பாரா? காரசார விவாதம் வந்துவிடுமா என்று கோடிக்கோடி கேள்விகள் மின்னல் போல சிந்தனையில் சிதறிக் கொண்டிருக்கும்.

பெற்றோரிடம் காதலரைப் பற்றியும், காதலரிடம் பெற்றோரைப் பற்றியும் நாம் சொன்னவைகள் எல்லாம் தண்ணீரில் எழுதியதாகி விடுமா என்ற எண்ணத்தில் நமது மனம் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கும்.

பெற்றோருக்கு பிடித்தது போல நடை, உடை, பாவனைகள் எல்லாம் காதலரிடம் ஒப்பித்துவிட்டிருந்தாலும் பார்த்த மாத்திரத்தில் பிடிக்காமல் போய்விடும் அபாயமும் உள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நன்கு பேசிக் கொண்டிருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம். ஏனெனில் இந்த சந்திப்பு இரண்டு பகை நாட்டுத் தளபதிகளின் சந்திப்பைப் போன்றதுதான்.

ஒரு சில பெற்றோர் வேண்டுமானால் ரொம்ப விட்டுக் கொடுத்து முழு மனதுடன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டலாம். பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளை காதலிப்பதை அறிந்து கொதித்து பின்னர் காதலரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிடுவார்கள்.

இந்த சந்திப்பின் மூலம் காதலரிடம் குறை காண மட்டும் பெற்றோர்கள் காத்திருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் காதலர்கள் என்னதான் அமைதியாக, விட்டுக் கொடுத்துப் பேசினாலும் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இந்த தருணம் எப்படி இருக்கும் என்பதை நம்மில் பாதி பேர் உணர்ந்திருப்பார்கள்.

இந்த சமயத்தில் நமது அச்ச உணர்ச்சியே நமக்கு பகையாகிவிடும். எனவே இதுபோன்ற தருணத்தில் நாம் மிக அமைதியாக, எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நமது இயல்பான நிலையே நமது காதலருக்கும் அமைதியைக் கொடுக்கும். இதனால் இந்த சந்திப்பு வெற்றி பெற வழி ஏற்படும். நாமே நமது காதலரை கலங்கச் செய்துவிடக் கூடாது.

‌நீ‌ங்க‌ள் இய‌ல்பாக இரு‌ந்து உ‌ங்க‌ள் காதலரையு‌ம் இய‌ல்பாக இரு‌க்க‌வி‌ட்டு, உ‌ங்க‌ள் காதலை வாழ வையு‌ங்க‌ள்.

காதலர்கள் பெற்றோரைக் கவர சில குறிப்புகள் - அடுத்த கட்டுரையில்

இப்படிக்கு
குமரேசன் படையாச்சி.....

Monday, February 4, 2008

இது காதல் தானா?


நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக்கிறீர்கள் உங்கள் கிளாஸ்மேட், பக்கத்து வீட்டு வாலிபன், தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்களுக்கு ரொம் பிடிக்கிறது. ஆனால்! இந்த விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை முறை குழம்பி இருப்பீர்கள்?

கதை, கவிதை, திரைப்படம், ஓவியம், இன்டர்நெட் என்று எங்கு பார்த்தாலும் காதலைப் பற்றிய பேச்சு! இருந்தும் உங்கள் குழப்பத்தை தீர்க்க முடியவில்லையா? நோ பிராப்ளம்! கீழே உள்ள குறிப்புகள் நிச்சயம் அது காதலா அல்லது நட்பா என்று தெரிந்து கொள்ள உதவும்!

அந்த `ஸ்பெஷல் நபரை' நினைத்துக்கொண்டு படித்துப் பாருங்கள். இது காதல்தான் என்றால் :

முன்பைவிட மேக்கப்பில் அதிக நேரம் செலவாகும்.

உடைகள் வாங்கும் போது உங்கள் நினைவில் தோன்றுவது "இது `அவனுக்கு' பிடிக்குமா?" என்பது தான்!

பாடங்கள் படிக்கும் போது நினைவுக்கு வருவது `அவனோடு' என்ன பேசலாம் என்பது.

ஆசிரியர் பாடம் நடத்தும் போது காதில் விழுவது `அவன்' பேசியது மட்டுமே!

பர்பியூம், சென்ட் என்று வாசனைப் பொருட்கள் வாங்குவதில் காசு கரைகிறது!

டெலிஃபோன் மணி அடித்தால் தாவிச் சென்று முதலில் எடுப்பது நீங்கள்!

`அவனை' நேரில் சந்தித்தது பத்தாமல் டெலிஃபோனிலும், இன்டர்நெட்டிலும் மணிக்கணக்காக அரட்டை தொடர்கிறது.

`அவனக்கு' விருப்பமான இசை, நடிகர்கள், (நடிகைகள் இந்த பட்டியலில் சேர முடியாது!) விளையாட்டில் திடீரென்று உங்களுக்கும் ஆர்வம் இருப்பதை கண்டுபிடிக்கிறீர்கள்!

நேத்து வரை நண்பிகளோடு வெளியே செல்ல அம்மாவிடம் சண்டைப் போட்டது போக, `அவன்' ஃபோன் செய்வார் என்ற காரணத்தால் அம்மாவே போகச் சொன்னாலும் வீட்டில் தங்கி விடுவது.

பீச், சினிமா, ஷாப்பிங் என்று எங்கு போனாலும் `அவன்' வந்திருக்கிறார் என்ற பிரமை ஏற்படுகிறது.

திருமணம், திருமணமான தோழிகள் திருமண வாழ்வு, எல்லாம் `போர்' என்று நினைத்த காலம் போய்விட்டது.

ஃபோன் செய்யும் போது உங்களை அறியாமலேயே விரல்கள் `அவன்' எண்ணை தட்டுகிறது.

(இரவு முழுதும் `அவன்' நினைவில் தூக்கமே வரவில்லை என்றாலும்) அம்மா எழுப்புவதற்கு முன்பே காலையில் சுறுசுறுப்பாக எழும்புவது.

என்ன? இப்போதாவது குழப்பம் தீர்ந்ததா? இது காதல் தானா??!!

ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும்.

இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்க போறீங்க!

* நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான காஸ்ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்ஸ் இருக்குற மாதிரியான உடைகள் எல்லாருடைய உடல் நிறத்திற்கும் பொருந்தும்.

* நிகழ்ச்சி நடக்குற இடத்துக்கு போனதும், எங்கையாவது, ஓரமா இடம் இருக்குதான்னு தேடி பார்த்து போய் உட்காராமல், அந்த நிகழ்ச்சி நடக்கிற இடத்தோட நடுவுல போய், உங்களுக்கு அறிமுகமானவங்க கிட்ட சகஜமா சிரிச்சு பேசுங்க.

* பேசும் போது, உங்க எதிர்பக்கம் நின்னுகிட்டு பேசுறவங்களுடைய கண்களை நேரா பார்த்து பேசுங்க. அப்படி பேசும் போது, உங்களுடைய உடல்மொழி (க்ஷடினல டுயபேரயபந)-யும், கவனத்துல வைச்சுக்கங்க.

*சுவர் மேலே சாய்ந்துக்கிட்டு பேசுறது, டேபிள் மேலே உட்காருவது, பேசும் போது வாயில ஏதாவது போட்டு மென்னுகிட்டே இருக்கிறது, நகம் கடிக்கறது, இந்த மாதிரியான செய்கைகள் உங்க கிட்ட இருக்கும் போது நீங்கள் ஆண்களை கவர முடியாம போறதுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு.

*அதே சமயத்துல உங்களுக்கு அறிமுகமாகிற நண்பர்கள் கிட்ட உங்களைப் பற்றியே ரொம்ப பெருமையான பேசிக்கறதும், சரியான அணுகுமுறை இல்லைங்க.

* அந்த நிகழ்ச்சியில உங்களுக்கு புதுசா, அறிமுகமாகிற ஆண் நண்பர்கள் கிட்ட, உங்களுடைய பழைய காதல் வாழ்க்கையை பத்தியோ அல்லது காதலரைப் பத்தியோ பேசாதீங்க. இது தான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம். ரெண்டு பேரும் ஒவ்வொருத்தரை பத்தி, நல்லா பேசி, மனசு அளவுல புரிஞ்சுக்கீட்டீங்க என்ற சூழ்நிலை வரும்போது நீங்க அவர் கிட்ட இந்த விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.

* நீங்க ஏதாவது நிகழ்ச்சிக்கோ அல்லது வெளி இடங்களுக்கு செல்லும் போதோ, உங்க மனசுக்கு பிடிச்ச நபரை நீங்க சந்திக்க நேரிட்டால், இந்த விஷயங்களை மறக்காம, பின்பற்ற, பழக்கப்படுத்திக்கங்க.

அப்புறம் வேற என்ன? உங்களுடைய நேரங்களை, இனிமையான முறையில் உங்க மனசுக்கு பிடிச்ச அவர் அடைய செலவு பண்ணுங்க...

அவன் என்னை காதலிக்கிறானா?


நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?

அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.

அவன் உங்களை காதலிக்கிறான் என்றால் :

காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.

அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் சொல்வான்.

நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.

அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.

ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )

உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.

நண்பர்களோடு நேரம் செலவளிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.

நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.

நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.

எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.

மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.

சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும்.

ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது!

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்


* சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

* தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

* சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

* காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...

* ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

* நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

* எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

* மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.